50 அடி உயரத்திலிருந்து சரிந்து விழுந்த நீர் தேக்க தொட்டி – வைரல் வீடியோ

புதுச்சேரி வீராம்பட்டினம் ஆர் கே நகரில் குடியிருக்கும் மக்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம்
குடிநீர் வினியோக்கப்பட்டு வந்தது. இந்த தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆனதால் புதிய தொட்டி கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிதலமடைந்த தொட்டியை இடிக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இன்று அப்பகுதியில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே சிதிலமடைந்த அந்த தொட்டியில் மேல் பகுதிகள் இரும்பு கயிறு மூலம் கட்டி இழுத்தனர். இந்தத் தொட்டி சில நிமிடங்களில் மேலே இருந்து சரிந்து விழுந்தது.

பயங்கர சத்தத்துடன் நீர்த்தேக்க தொட்டி விழுந்த காட்சியை ஊழியர்கள் சிலர் எடுத்தனர். அப்போது கீழே இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு புகை இருந்ததால் அனைவரும் பதற்றத்துடன் தேட ஆரம்பித்தனர். புகை குறைந்தவுடன் பார்த்தபோது அவர்கள் பத்திரமாக இருந்தது தெரிய வந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.

RELATED ARTICLES

Recent News