உணவகத்திலிருந்து வாகனம், லேப்-டாப் திருடியவரை கைது செய்த போலீஸ்

புதுச்சேரி நயினார்மண்டபம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(36). இவர் புதுச்சேரி 100 அடி சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். உணவகத்திற்கு கடந்த 3 மாதங்களாக திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது யாசின்(34) என்பவர் வேலை செய்து வந்த நிலையில்
கடந்த மாதம் 25-ந் தேதி இவர் அந்த உணவகத்தில் இருந்து ஒரு லேப் டாப், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம், செல்போன் மற்றும் இரு சக்கர மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த உணவகத்தின் உரிமையாளர் பிரவீன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் முகமது யாசின், சிதம்பரம், அம்மாபேட்டை, புத்துகோயில் தெருவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன், ரூ. 5 ஆயிரம் ரோக்க பணம், லேப்டாப் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News