துருக்கி, சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை என்பதால் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 284 பேரும், சிரியாவில் 237 பேரும் என மொத்தம் 521 பேர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.