உ.பி மாநிலம் மீரட்டில் இளைஞர் ஒருவர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட பெண் முதலில் முத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதில் மயங்கிய அந்த வாலிபர் முத்தம் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். இளம்பெண் முத்தம் கொடுக்க முயன்ற போது வாலிபரின் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.
வாலிபரின் உதட்டில் ரத்தம் பீறிட்டு வந்ததால் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். பிறகு அந்த வாலிபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இளம்பெண்ணின் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.