“நான் வந்துவிட்டேன்” – பிறந்த உடனே பேசிய குழந்தை.. உறுதி செய்த மருத்துவர்கள்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சின்ன அழிசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். கர்ப்பமாக இருந்த இவருடைய மனைவி ரேவதி, அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு ரேவதிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. பொதுவாக அழுகையுடன் தான் குழந்தைகள் பிறக்கும். ஆனால், ரேவதிக்கு பிறந்த குழந்தை, நான் வந்துவிட்டேன் என்று கத்திக்கொண்டே பிறந்ததாக கூறப்படுகிறது.

கேட்பதற்கு நம்ப முடியாத செய்தியாக இருந்தாலும், ரேவதிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரே, இதனை உறுதி செய்துள்ளார். இந்த தகவல், அந்த கிராமம் முழுவதும் பரவியதையடுத்து, அந்த குழந்தையை பார்ப்பதற்கு, கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

குழந்தை பிறந்த பிறகு தான், அது எந்த மொழியை பேசும் என்பது முடிவு செய்யப்படுகிறது. ஆனால், பிறக்கும்போதே, இந்த குழந்தை எப்படி தமிழில் பேசியது என்று தான் தெரியவில்லை.. இந்த தகவலை, மருத்துவர்களே உறுதி செய்திருப்பது தான், அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News