கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக லிப்டில் சிக்கி உயிருக்கு போராடிய இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை கோயம்பேடு அடுத்த சின்மயா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் ஏற்பட்ட இயந்திரம் கோளாறு காரணமாக லிப்டில் சென்ற இருவர் சிக்கிக் கொண்டு நீண்ட நேரமாக உயிருக்கு போராடி வந்துள்ளனர். இது குறித்து கோயம்பேடு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து கோயம்பேடு சிறப்பு நியமன அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டு போராடி இருந்த பத்மநாபன், பிரகாஷ் ஆகிய இருவரை ஒரு மணி நேரமாக போராடி மீட்டனர்.
ராட்சத இயந்திரங்கள் கொண்டு லிப்டை அறுத்தும், உடைத்தும் லாபகமாக செயல்பட்டு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.