துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம், உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு, இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, துருக்கி நாட்டிற்கு உதவி செய்ய, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய சகோதர-சகோதரியின் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில், தனது தம்பியின் தலையில் கட்டிட கற்கள் படாதவாறு, 7 வயது சிறுமி பார்த்துக் கொள்கிறார்.
இந்த நெகிழ்ச்சியான புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அந்த சிறுமியின் பாசத்தை பாராட்டி வருகின்றனர்.