கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு சாம்சன். திருங்கையான இவர், ரயிலில் சென்றுக் கொண்டிருந்தபோது, 16 வயது பள்ளி மாணவனை மிரட்டி, ஓரிணச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
ரயில் நின்ற பிறகு, தன்னுடன் வரவேண்டும் என்றும் சிறுவனை மிரட்டியுள்ளார். ஆனால், திருநங்கையுடன் செல்லாத சிறுவன், அங்கிருந்து தப்பி வந்துள்ளான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சஞ்சு சாம்சனை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அந்த திருநங்கைக்கு 7 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.