அஸ்ஸாம் மாநிலம் ஹைலகண்டி பகுதியை சேர்ந்தவர் நிசாமுதின். இவரது வீட்டில் இளைஞர் ஒருவர் திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை பிடித்த நிசாமுதின், மரத்தின் அடியில் கட்டிப்போட்டு, அவருக்கு மொட்டை அடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கிய நிசாமுதின், அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, நிசாமுதின் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருடுவது என்பது தவறாக இருந்தாலும், மனிதநேயமே இல்லாமல் நடந்துக் கொண்ட நிசாமுதினை, நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.