உத்தரபிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரை சேர்ந்தவர் ரஞ்சித். இவரும், நேகா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று, தனது காதலியிடம் ரஞ்சித் கூறியுள்ளார். ஆனால், அதற்கு நேகா மறுப்பு தெரிவித்ததால், ரஞ்சித் தவறான முடிவை கையில் எடுத்தார்.
இருவரும் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை, காதலியின் குடும்பத்திற்கு அனுப்பிய அவர், நேகாவை திருமணம் செய்து வைக்கும்படி, மிரட்டினார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், திருமணம் செய்து வைப்பதாக கூறி, ரஞ்சித்தை வீட்டிற்கு அழைத்து, கழுத்தை நெறித்து கொலை செய்தனர்.
7 மாதங்களுக்கு பின் இதனை கண்டறிந்த காவல்துறையினர், நேகாவின் குடும்பத்தினரை கைது செய்தனர்.