கேரளாவில் திடீரென தீப்பற்றிய கார் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஓடிகொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காரிலிருந்தவர்கள் விரைந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட தாளப்புழா பகுதி வழியாக கொடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன்பிருந்து புகை எழுந்தது.

உடனடியாக அவர்கள் காரை நிறுத்தி விட்டு காரிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் புகை எழுந்த பகுதியிலிருந்து தீ எழுந்து மளமளவென படர்ந்தது.

உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் ஆட்டோ டாக்சி டிரைவர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். காரிலிருந்தவர்கள் விரைந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

RELATED ARTICLES

Recent News