கடலூர் மாவட்டம் முதுநகரை சேர்ந்தவர்கள் சற்குரு – தனலட்சுமி தம்பதி. சற்குருவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், தனது மனைவியை விவாகரத்து செய்ய, நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால், தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவரது மனைவி நீதிமன்றத்தில் கூறிவிட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சற்குரு, வீட்டிற்கு வந்த பிறகு, பெட்ரோலை எடுத்து, தன் மீது ஊற்றிக் கொண்டார். அதனை அவரது மனைவியும், மாமியாரும் தடுத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்து அனைவர் மீதும் நெருப்பு படர்ந்துள்ளது.
இந்த விபத்தில், சற்குருவும், 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும், மனைவி தனலட்சுமி, மாமியார் செல்வி ஆகியோர் 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.