“நீ.. நான்.. ரேணுகா” – மனைவியே செய்து வைத்த 2-வது திருமணம்! ஆனால்.. கணவனின் ஆசையால் நடந்த கொடூரம்..

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சஞ்சய் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ். 28 வயான இவருக்கு, ரேனுகா என்ற மனைவி உள்ளார். மதுவுக்கு அடிமையான ரேனுகாவிற்கு, மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நட்பாக மாறியுள்ளது.

அந்த பெண்ணுக்கு உறவினர் யாரும் இல்லாததால், தனது கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து, 3 பேரும் ஒன்றாக வாழலாம் என்று ரேணுகா நினைத்துள்ளார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்த பிறகு, ரேணுகாவை சுரேஷ் புறக்கணித்துள்ளார்.

இதனால் கடும் கோபம் அடைந்த அவர், 2-வது மனைவியின் உதவியுடன், தனது கணவரை கொலை செய்தார். தன்னுடைய கணவரை வேறு யாரே கொலை செய்துவிட்டதாக நாடகமாடிய அவர், காவல்துறையின் விசாரணைக்கு பின், நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

RELATED ARTICLES

Recent News