பீர் பாட்டிலால் தாயை கொலை செய்த மகன் கைது..!

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கண்ணகி(45). இவரது மகன் அஜய்(22). பெயிண்டர்.

மகா சிவராத்திரி விழாவுக்காக மாலை அணிந்த நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மாலை அணிந்து விட்டு தினமும் குடித்து விட்டு வருகிறாயே என தாயார் கண்ணகி கண்டித்துள்ளார்..

இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் பீர் பாட்டிலை உடைத்து தாயார் கண்ணகியை, சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயம் அடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணகி, இன்று அதிகாலை இறந்தார்.

இது தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜயை கைது செய்தனர்

RELATED ARTICLES

Recent News