கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. அதில் வேலை செய்யும் (மேஸ்திரி) பணியாளர்களுக்கு படிக்கும் மாணவர்களை டீ (தேனீர்) வாங்க டீ கடைக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
அப்போது டீ கடையில் இருந்த பொதுமக்கள் மாணவர்களை டீ யாருக்கு, யார் வாங்கி வரச்சொன்னது என கேட்டனர். அதற்கு மாணவர்கள் கணித ஆசிரியர் இளங்கோ அனுப்பியதாகவும், யாருக்கு என தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தலைமையாசிரியரிடம் கேட்டதுக்கு எனக்கு தெரியாமல் நடந்து விட்டதாகவும் இனிமேல் இது போன்று தவறுகள் நடக்காது என்றும் கூறினார். இதுபோன்று பள்ளி மாணவர்களை வேலை வாங்கு ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.