பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று பசு அணைப்பு தினம் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
சமூக வலைத்தளங்களில் ஏராளமான விமர்சனங்கள், கண்டனங்கள் கிளம்பியது. பசு அணைப்பு தினத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இந்த அறிவிப்பை கைவிடுவதாக இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.
கால்நடை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை அடுத்து பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்ப பெறுவதாக விளக்கம் அளித்துள்ளது.
பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்ப பெறுவதாக இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிப்பு pic.twitter.com/zOuSdW8JtG
— Raj News Tamil (@rajnewstamil) February 10, 2023