துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தெற்கு மண்டலம் சார்பில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.