சென்னை சைதாப்பேட்டையில் நேற்று இரவு கருணை இல்லத்திற்கு உணவளிப்பதற்காக சமைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்தது.
இந்த விபத்தில் இயேசுவே நித்திய ஜீவன் சர்ச் பாதிரியார் நித்தியானந்தம்(32), வனிதா (38), புண்ணியகோடி(46), நித்தியா(35), ஆறுமுகம்(42) ஆகிய ஐந்து பேர் தீக்காயம் அடைந்தனர். சிலிண்டர் வெடிப்பில் சிக்கி படுகாயம் அடைந்த ஐந்து நபர்களும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருந்தவர்கள் ஐந்து பேரையும் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கி தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
தீ விபத்தில் நித்யா மற்றும் புன்னியகோடி ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.