கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
ஆவலப்பள்ளி பாரதிதாசன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்டுகள் மற்றும் தின்னர் திரவம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் குடோன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் பற்றி எரிந்து வெடித்து சிதறியதில் அருகில் இருந்த பெயிண்ட் குடோனுக்கும் தீ மளமள வென பரவியது. இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெயிண்ட் போன்ற பொருட்கள் என்பதால் தீ பற்றி எரியும் வேகம் அதிகமாக உள்ளதால், இரண்டு தீயணைப்பு துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தின் அருகே பெட்ரோல் பங்கு, குடியிருப்பு பகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.