பல்லாவரம் அருகே பெயிண்டிங் வேலை செய்தற்காக வந்த மேஸ்திரி பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையா? தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மேஸ்திரி மணி (37) நேற்று இரவு அனாகாபுத்தூர் குருசாமி பிதான சாலையில் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பிற்க்கு தங்கி பெயிண்டிங் வேலை செய்வதற்காக தன்னுடன் கூலி தொழிலாளர்கள் பத்து பேரை அழைத்து வந்துள்ளார். இரவில் மணி தன்னுடன் வந்தவர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு மூன்றாவது தளத்தில் தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் தலையில் பலத்த காயத்துடன் மணி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையதிற்க்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணி உடன் மது அருந்தியவர்களுடன் கொலை செய்யபட்டார அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
வேலைக்காக வந்த நபர் பக்கத்து வீட்டின் மாடியில் சடலமாக கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.