டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..!

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பிபிசி சேனல் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை செய்து வருகின்றனர். பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

RELATED ARTICLES

Recent News