உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன போராட்டத்தில் அனுமன் சேனா அமைப்பினர் ஈடுபட்டனர்.
கோயில்கள் மற்றும் பூங்காவில் கூடும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நூதன போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனா அமைப்பினர் ஈடுபட்டனர். இந்து கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரான காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
நாதஸ்வர மேள தாளமுடன், தேங்காய், பூ, பழங்கள், திருமாங்கல்யம் உள்ளிட்ட பொருட்களுடன் வரிசை தட்டுடன் ஊர்வலமாக வந்து அனுமன் சேனா அமைப்பினரை காவல்துறையினர் கோயில் வாசலில் தடுத்து நிறுத்தினர்.