மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சான்டாகுரூஸ் என்ற பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் நபர், தனது வீட்டிற்கு பெண் ஒருவரை விருந்தினராக அழைத்து வந்துள்ளார்.
மது போதையின் உச்சிக்கு சென்ற அந்த பெண், தனது ஆடைகள் அனைத்தையும் கழட்டிவிட்டு, நிர்வாணமாக, கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார். இதனை அறிந்த அந்த குடியிருப்பு வாசிகள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதில், அந்த வீட்டில் வசிக்கும் ஆண், இதுபோல் பலமுறை பல பெண்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அந்த பெண்களால், பலமுறை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த ஆணுக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணமாகி, வேறொரு வீட்டில் வசித்து வருகிறார்.
ஆனால், சில நேரங்களில் பிற பெண்களை இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைப்பு வந்து, அநாகரீகமாக நடந்துக் கொள்கிறார் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.