சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பத்தானி ஜோடியாகவும், யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

சுமார் 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா, மும்பையில் நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.