ரோபோ ஷங்கருக்கு ரூ.5 லட்சம் அபராதம்! காரணம் என்ன?

கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைந்தவர் ரோபோ ஷங்கர். இதையடுத்து, சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர், அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன், இணைந்து நடித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் இவர், தனது வீட்டில் பல்வேறு வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், அவர் வளர்த்து வந்த அலெக்ஸாண்டரியன் வகை கிளிகளை பறிமுதல் செய்து, சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அந்த கிளிகளை ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து, அவருக்கு ரூபாய் 5 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. Youtube -ல் வெளியான வீடியோவை வைத்து தான், ரோபோ ஷங்கர் வீட்டில் அலெக்ஸாண்டரியன் வகை கிளிகள் வளர்க்கப்படுவது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸாண்டரியன் வகை கிளிகள், அழிந்து வரும் இனம் என்பதாலும், இந்த வகை கிளிகள், எளிதில் நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை என்பதாலும், அதனை வளர்ப்பதற்கு, கடந்த 1990-ஆம் ஆண்டு அன்று தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், பலர் அதனை சட்டவிரோதமாக வளர்த்து வருகின்றனர். எனவே, ரோபோ ஷங்கருக்கு அந்த கிளி வகைகள் எப்படி கிடைத்தது என்றும், வனத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News