மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த காவல்நிலையங்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
முசிறியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகளை விரைவாகப் பதிவு செய்தல், விசாரணை மற்றும் வழக்குகளை தீர்ப்பது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்கியது.
இந்த விருது சான்றிதழை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களை நேரில் சந்தித்து விருதினை காண்பித்தார்.