கர்நாடகா மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் 2023 வது ஆண்டிகிற்கான இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பெங்களூரு மெட்ரோ திட்டம் விரிவாக்கம், விவசாய கடன் தொகை உயர்வு உள்ளிட்ட திட்டங்களை பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
இந்த பட்ஜெட் உரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. பட்ஜெட் தாக்கலின்போது சட்டசபைக்கு வருகை தந்த கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் காதில் பூ வைத்து கொண்டு வந்தனர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா வரும் காதில் பூ வைத்து வந்தது அனைவரையும் கவனிக்க வைத்தது.
பாஜக கடந்த தேர்தல் அறிக்கையில் கூறிய 600 வாக்குறுதிகளில் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டும் தான் செய்து இருப்பதாக சித்தராமையா தெரிவித்து இருந்தார்.