தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தனியார் திரையரங்கில் பகாசூரன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்தநிலையில் படம் இடைவேளையின் போது திருச்செந்தூரை சேர்ந்த மகாதேவி என்பவர் அங்குள்ள கேண்டீனில் பாப்கார்ன் வாங்கியுள்ளார். அதில் ஒரு பாப்கார்னில் கரப்பான்பூச்சி உயிருடன் நெழிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இதுதொடர்பாக திரையரங்கு நிர்வாகத்னிரடமும் , கேண்டீன் பணியாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளர். இதனையடுத்து திரையரங்கு நிர்வாகமும் பணியாளர்கள் அவரை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சினிமா பார்ப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.
தற்போது பாப்கார்னில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்கில் விற்கப்படும் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்க்கப்படுவதாகவும், தரமற்ற தின்பண்டங்கள் விற்கப்படுவதாகவும் ரசிகர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையும் மாவட்ட நிர்வாகமும் திரையரங்க நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.