சட்டிஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள குடியாி பகுதியை சேர்ந்தவர் ஓம்கர் திவாரி. 47 வயதான இவர், மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த கடையில், 16 வயதான இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார்.
இந்த பெண்ணிடம் அடிக்கடி அத்துமீறும் ஓம்கர் திவாரி, தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி, தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதனை ஒரு கட்டத்திற்கு மேல், பொறுத்துக் கொள்ளாத அந்த பெண், மளிகைக் கடைக்கு பணிக்காக செல்வதை நிறுத்தியுள்ளார்.
இதனால், கடும் கோபம் அடைந்த ஓம்கர் திவாரி, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல், அங்கிந்து தப்ப முயன்ற அந்த பெண்ணை, தலை முடியை பிடித்து, கொடூரமாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, திவாரியை காவல்துறையினர், கைது செய்துள்ளனர்.