தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவான இப்படத்தில், சம்யுக்தா ஜோடியாகவும், சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதனிடையே போயஸ் கார்டன் பகுதியில் சுமார் 150 கோடி முதலீட்டில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தார். இதன் புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் ரஜினிகாந்த் வீட்டருகே கட்டிய இவ்வீட்டை, தனது தாய், தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளார். தற்போது இந்த பிரமாண்ட மாளிகையின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.