சினிமா
வீடியோ வெளியாகி வசமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகர்!
பாரதி கண்ணம்மா என்ற சீரியலில், பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் அருண் பிரசாத். இவரும், ராஜா ராணி சீரியலில் நடித்திருந்த நடிகை அர்ச்சணாவும், காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அவர்கள் இருவரும், தங்களது காதலை வெளிப்படையாக சொல்லவில்லை.
இவ்வாறு இருக்க, இயற்கை சூழ்ந்த அழகிய இடத்திற்கு அருண் பிரசாத் சுற்றுலா சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோவையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல், நடிகை அர்ச்சணாவும், சுற்றுலா சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த இரண்டு வீடியோவும், ஒரே பகுதியில் எடுத்திருப்பதை உறுதி செய்த ரசிகர்கள், இவர்கள் இருவரும் ஒரே இடத்திற்கு தான் சுற்றுலா சென்றுள்ளனர் என்பதையும், காதலிக்கின்றனர் என்பதையும், கண்டறிந்துள்ளனர். பொத்தி பொத்தி வைத்த காதல், ஒரே ஒரு வீடியோவின் மூலம், உலககத்திற்கே தெரிந்துவிட்டதே என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login