ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில், புலியின் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
வீட்டின் வெளியே தூங்க வேண்டாம், தனியாக செல்ல வேண்டாம், புலி இருக்கும் இடத்தை அறிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள், அப்பகுதி மக்களிடம் கூறப்பட்டது. இதுமட்டுமின்றி, புலிகளின் நடவடிக்கையை அறிய, ட்ராப் கேமராக்களும் பொருத்தப்பட்டன.
இந்நிலையில், அந்த புலி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. அதன் உடலை பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், அதன் கறியை எடுத்து, சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
மேலும், புலியின் பற்களையும், நகங்களையும் எடுப்பதில், அங்கிருந்தவர்களிடையே, சில சலசலப்புகளும், தகராறுகளும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர், புலிக் கறியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களை கைது செய்துள்ளனர்.