கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லெஃப்டினன் கர்னல் பாண்டியன், “இந்திய ராணுவம் உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவம். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். ராணுவத்தில் பணிபுரிந்த பிரபு அவர்களை தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்துள்ளார். தி.மு.க தைரியத்தால்தான் ராணுவ வீரரை கொலை செய்திருக்கிறார்கள்.
இதுபோன்று இனி நடக்க கூடாது. அப்படி செய்தால், மேடையில் இருக்கும் அத்தனை ராணுவ வீரர்களுக்கும் மிக நன்றாகவே குண்டு வைக்கத் தெரியும், துப்பாக்கிச் சுட தெரியும். இனிமேலும் இது நடந்தால் நாங்கள் செய்வோம்” என அவர் பேசினார். இவருடைய இந்த பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.