ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே திருமண வயது? – உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

ஆணும், பெண்ணும் சமம். அவர்கள் இருவருக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர்.

இருப்பினும், சட்ட அளவில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், நடைமுறை அளவில், பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அஸ்வினி குமார் உபாத்தியாயா என்பவர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “திருமணம் செய்துக் கொள்வதற்கான வயது, பெண்களுக்கு 18-ஆகவும், ஆண்களுக்கு 21-ஆகவும் உள்ளது. நாட்டில் பாலின நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் கவுரவம் போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். அதற்காக இரு பாலினத்தவருக்கும் ஒரே மாதிரியான திருமண வயது இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, அரசியலமைப்பு சாசனத்தின் ஒரே பாதுகாவலர் உச்சநீதிமன்றம் என்று நினைக்கக் கூடாது. நாடாளுமன்றமும் அரசியல் சாசனத்தின் பாதுகாவலர் தான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திடம் விட்டு விட வேண்டும். சட்டத்தை இங்கு இயற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News