நடுரோட்டில் காரை நிறுத்தி விட்டு படுத்து தூங்கிய போதை ஆசாமி..!

காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் நீண்ட நேரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காரின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த நபரை வாகன ஓட்டிகள் எழுப்ப முயற்சி செய்தனர். அந்த நபர் எழுந்திருக்காத நிலையில், அங்கு வந்த போலீசார் கார் கண்ணாடியை உடைத்து அந்த நபரை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் ரஞ்சித் என்ற அந்த நபர் மனா உளைச்சல் காரணமாக அதிகளவில் மது அருந்திவிட்டு வாகனத்தில் படுத்து தூங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

RELATED ARTICLES

Recent News