மதுரை மாவட்டம் மேலூர் அருகே சின்னகற்பூரம் பட்டியை சேர்ந்தவர் அழகன். இவர் மேலவளவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மகன் தமிழ்வாணன், மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
தலைமை காவலர் அழகன், அவரது மனைவி நாச்சம்மாள், அவரது மகன் தமிழ்வாணன் ஆகிய மூவரும் மேலூர் காந்தி நகரில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். நாச்சமாளுக்கும் தலைமை காவலர் அழகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்து வந்துள்ளது. இதனை அவரது மகன் தமிழ்வாணன் பலமுறை கண்டித்தும் இருவரும் அடிக்கடி சண்டை இட்டு கொண்டதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை தாய் நாச்சம்மாள் மற்றும் தந்தை அழகன் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதால் தேர்விற்கு படித்துக் கொண்டிருந்த அவரது மகன் தமிழ்வாணன் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களது வீட்டில் அங்கிருந்த கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அவரது தந்தை தனது மகன் இறந்ததை கண்டு அதிர்ச்சி தாங்காமல் வீட்டில் உள்ளே ஓடி சென்ற அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருவரது உடலையும் கைப்பற்றி மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக மருத்துவரும் தலைமை காவலிடம் உயிர் இழந்தனரா? இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து மேற்கண்ட விசாரணைக்கு பிறகு தெரியவரும்.
தேவையற்ற குடும்பச் சச்சரவு ஒரு சிறந்த மருத்துவரையும் காவல் பணியில் இருந்த தலைமை காவலரையும் உயிரிழக்க செய்துள்ளது அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாக்கி உள்ளது.