துணிவு திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்கு, அஜித் முடிவு செய்துள்ளாராம். இதன்காரணமாக, விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, மகிழ் திருமேனியுடன், அடுத்ததாக அஜித் இணைய உள்ளார்.
இந்த தகவல், 90 சதவீதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை. இவ்வாறு இருக்க, ஏ.கே 62 தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்திற்கு இதுவரை 3 டைட்டில்கள் முடிவு செய்யப்பட்டு, அது தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த 3 டைட்டில்களில் எதையாவது ஒன்று முடிவு செய்து, அது மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மார்ச் 3-வது வாரத்தில், படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.