பிரபல மலையாள நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் (42) பிப்ரவரி இன்று காலை காலமானார்.
சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பல நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

சுபி சுரேஷ் கல்லீரல் பிரச்சனையால் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் நிமோனியா காய்ச்சலால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.