கிருஷ்ணகிரி ஆயுதப் படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் மணிவேல். இவர் இன்று காலை கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகம் பின்புறம் உள்ள செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது தன்னுடைய விருப்பமின்றி தன்னுடன் சேர்த்து 8 பேரை பணி மாறுதல் செய்துள்ளனர். தாங்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து இப்பொழுதுதான் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் பணிவு சேர்ந்த இரண்டு மாதத்திலேயே தங்களை பணி மாறுதல் செய்கின்றனர்.
காவல்துறையில் பணிபுரிவது மன உளைச்சல் ஏற்படுகிறது. மேல் அதிகாரிகள் தங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை எனக் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் காவல்துறை தலைவர் நேரில் வந்து தங்களது குறைகளை கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.