மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காளிதாஸ் ஜெயராம். இதையடுத்து, பாவக் கதைகள் என்ற ஆந்தலாஜி திரைப்படத்தில், திருநங்கை வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார்.
பின்னர், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து, வளர்ந்து வரும் கதாநாயகனாக மாறி வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த பெண், மிஸ் தமிழ்நாடு டைட்டில் பட்டம் என்ற தாரணி காளிங்கராயர் என்றும் கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தில், காளிதாஸ் மிகவும் நெருக்கமாக இருப்பதால், இருவரும் காதலிக்கிறார்களா என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.