அஜித்தின் 62-வது படத்தை இயக்கப்போவது யார் என்பது தான் மில்லியன் டாலர் பதிலாக இருந்து வருகிறது. இந்த கேள்விக்கான பதில், மகிழ் திருமேனி என்ற சினிமா நிரூபர்கள் சிலர் கூறி வந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமலே இருந்து வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அஜித்தின் 62-வது படத்தின் பூஜையே சைலண்டாக நடந்து முடிந்துவிட்டதாம். படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருக்க வேண்டும் என்று அஜித் அறிவுறுத்தியுள்ளாராம்.
இதனால், மகிழ் திருமேனி மீண்டும் கதை எழுதி வருகிறாராம். மார்ச் மாதம் 3-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. லியோ படத்தின் பூஜையை போல, ஏ.கே. 62 படத்தின் பூஜையும், சைலண்டாக நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.