சென்னையில் அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை போன்ற இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால், மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்படாது என்றும் அங்கே பணி நடைபெறவில்லை எனவும் மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதா? எனகேட்கப்பட்டுள்ளது. இதுவரை அத்தகைய தகவல்கள் எதுவும் அந்த மையத்தில் இருந்து கிடைக்கப்பெறவில்லை.