இந்தியாவின் முன்னணி ஐடி கம்பெணிகளில் ஒன்று விப்ரோ. இந்த நிறுவனத்தின் மூலம், சிறப்பு பயிற்சி ஒன்று வழங்கப்பட்டு, அதன்மூலமும், ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான அந்த சிறப்பு பயிற்சியை முடித்த ஊழியர்களுக்கு, பணி வழங்கப்பட்டது.
ரூ.6.5 லட்சம், வருட சம்பளமாக பேசப்பட்டது. ஆனால், புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு திடீரென மெயில் அனுப்பிய அந்த நிறுவனம், உங்களது ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.
மேலும், இந்த சம்பளம் உங்களுக்கு கட்டுப்பாடியாகும் பட்சத்தில் நீங்கள் வேலை செய்யலாம் என்றும், நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை என்றும், அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு எதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்றால், இவர்களது சம்பளத்தில் பாதியாக பிடிக்கப்பட்டுள்ள தொகை, அந்த நிறுவனத்தின் வேறு சில திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாம். விப்ரோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பை பார்த்த தொழில் நிபுணர்கள், இது அறமற்ற செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.