கார்ல் மார்க்ஸ் சிந்தனையை இழிவுபடுத்தியதாக ஆளுநர் ரவியை கண்டித்து சிபிஎம் போராட்டம்

மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிந்தனையை இழிவு படுத்தி பேசிய தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக ஆளுநர் ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவராக இருந்த தீனதயாள் உபாத்யாயா எழுதிய இரண்டு புத்தகங்களின் தமிழாக்க வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

அப்போது காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும் மக்களை பாதுகாக்க வேண்டிய ஆளுநர் மக்களை சிதைத்து வருகிறார் என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

கார்ல் மார்க்ஸ் குறித்து அழகப்பா பல்கலைக்கழக புத்தக வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததை திரும்பப் பெற வேண்டும் எனவும், இல்லாவிடில் மாவட்டம் முழுவதும் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியோடு நடைபெறும் எனவும் கண்டனம் தெரிவித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

Recent News