கணவர் வேண்டாம்.. கணவரின் தங்கச்சியை திருமணம் செய்த பெண்..

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரமோத் தாஸ் – சுக்லா தேவி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கை, அமைதியாக சென்ற நிலையில், கடந்த 6 மாதங்களாக, சில பிரச்சனைகளை சந்தித்தது.

அதாவது, சுக்லா தேவிக்கும், அவரது கணவருடைய தங்கை சோனி தேவிக்கும் இடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல விரும்பிய சுக்லா தேவி, தனது கணவரை விட்டு பிரிந்து, சோனி தேவியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, ஆணை போல தனது தோற்றத்தை மாற்றிக் கொண்ட சுக்லா தேவி, தனது பெயரை சூரஜ் குமார் என்றும் சூட்டிக் கொண்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த தகவலை அறிந்த சோனி தேவியின் குடும்பத்தினர், அந்த பெண்ணை அவரிடம் இருந்து பிரித்து, தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனால், கடும் கோபம் அடைந்த சுக்லா தேவி, தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News