“நீ என் உயிரையே காப்பாத்திட்ட” – அண்ணனுக்காக தானம் செய்த சிறுவன்! கண்கலங்க வைக்கும் வீடியோ!

அண்ணன் தம்பி உறவு என்பது மிகவும் பாசத்திற்குரிய ஒன்றாகும். ஏதேனும் பிரச்சனை வந்தாலும் கூட, எங்க அண்ணன் அல்லது தம்பி வருவாங்க என்ற மனநிலையோடு தான், அனைவரும் இருப்பார்கள். அந்த உறவு இல்லாதவர்களுக்கு தான், அதன் அருமை தெரியும்.

இந்நிலையில், இந்த அண்ணன் தம்பி உறவின் பாசத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோ ஒன்று வெளியாகி, கண்களை கண்ணீர் குளமாக மாற்றியுள்ளது. அதாவது, பிரஸ்டன் என்ற சிறுவன், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நோயின் தீவிரத்தால், அந்த சிறுவனின் எலும்பு மஞ்சை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை யாராவது தானமாக வழங்கினால், அந்த சிறுவனின் உயிர் காப்பாற்றப்படும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, அந்த சிறுவனுக்காக, அவனது தம்பி, தனது எலும்பு மஞ்சைகளில் ஒன்றை தானமாக வழங்கியுள்ளான்.

இதுதொடர்பான வீடியோ, மேஜிகலி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி, பார்வையாளர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இதுதான் உண்மையான அண்ணன் தம்பி பாசத்திற்கான எடுத்துக்காட்டு என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வந்தனர்.

RELATED ARTICLES

Recent News