திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சுந்தர ராஜபுரத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில், மருத்துவம் சார்ந்த படிப்பை படித்து வந்தார். அப்போது, இவருக்கும், அதே கல்லூரியில் படித்து வந்த சீனிவாசன் என்பவருக்கும் இடையே, காதல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காயத்ரியின் பெற்றோர், யுவராஜ் என்பவரை அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை இருந்தபோதிலும், சீனிவாசனை மறக்காத காயத்ரி, அவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இதனை அறிந்த யுவராஜ், தனது மனைவியை கண்டித்துவிட்டு, வேலை செல்லக் கூடாது என்று கூறியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த காயத்ரி, தனது காதலனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து, காயத்ரியின் வீட்டிற்கு தனது நண்பர்கள் 2 பேருடன் வந்த சீனிவாசன், யுவராஜிடம் வாக்குவாதம் செய்தார்.
இந்த வாக்குவாதம் முற்றியநிலையில், காயத்ரி, சீனிவாசன், அவரது 2 நண்பர்கள் சேர்ந்து, யுவராஜை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.