சினிமா
விடுதலை படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?
அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த திரைப்படம், எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாகத்திற்கான பணிகள் கிட்டதட்ட முடிந்துள்ளதால், வரும் 8-ஆம் முதல் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரும் மார்ச் 31-ஆம் தேதி அன்று, படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.
You must be logged in to post a comment Login