சமீபகாலங்களாக விஜய்க்கு Tough கொடுக்கும் முயற்சியில் அஜித் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு சினிமா நிரூபர்களே, பலமேடைகளில் கூறிவிட்டனர். இதனை இன்னும் ஊர்ஜிதப்படுத்தும் வகையில், மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்க உள்ளார் என்ற தகவல், 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில், ஏ.கே 62 படத்தின் டைட்டில் தொடர்பான அப்டேட் கசிந்துள்ளது.
அதன்படி, இந்த படத்திற்கு, டெவில் என்று பெயர் வைக்க உள்ளார்களாம. பொதுவாக, மகிழ் திருமேனியின் திரைப்படங்களுக்கு, சுத்த தமிழில் தான் பெயர் வைப்பது வழக்கம்.
ஆனால், லியோ படத்திற்கு டைட்டிலில் இருந்தே ஈடுகொடுக்க வேண்டும் என்ற காரணத்தால், அஜித் தான், இவ்வாறு டைட்டில் வைக்க சொன்னதாக, தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.