சிறுத்தை கூண்டில் சிக்கி கதறிய இளைஞர் – வைரல் வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹார் மாவட்டத்திலுள்ள பாசேந்துவா கிராமத்தில் சிறுத்தைகள் தொல்லை இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத் துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது.

அந்த கூண்டில் சிறுத்தைக்காக சேவல் ஒன்று இரையாக வைக்கப்பட்டிருந்தது. அந்த சேவலை எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் சிறுத்தைக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கினார். கூண்டைத் திறக்க முடியாததால் அந்த இளைஞர் கதறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News